×

தளி அருகே ரூ30 லட்சத்தில் தார் சாலை பணி

தேன்கனிக்கோட்டை,  அக்.26: தளி அருகே சாத்தனூர் ஊராட்சியில், ரூ30 லட்சத்தில் உச்சனப்பள்ளி  முதல் அடவிசாமிபுரம் வரை தார்சாலை அமைக்கும் பணியை திமுக எம்எல்ஏ பிரகாஷ்  துவக்கி வைத்தார். தளி அருகே சாத்தனூர் ஊராட்சி  உச்சனப்பள்ளி முதல் அடவிசாமிபுரம் கிராமம் வரை சாலை வசதி கேட்டு, அப்பகுதி மக்கள் எம்எல்ஏ பிரகாஷிடம்  கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து ரூ30 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்க நடவடிக்கை  எடுக்கப்பட்டது. இதற்கான பூமி பூஜையில், மேற்கு  மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்துகொண்டு, சாலை பணிகளை துவக்கி  வைத்தார்.

நிகழ்ச்சியில் தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலு ரெட்டி,  ஒன்றிய அவைத்தலைவர் கிரிஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் வேணு, மாவட்ட  பிரதிநிதி கணேஷ், தகவல் தொழில்நுட்ப அணி ரவி, வினோத், முன்னாள்  கவுன்சிலர்கள் திம்மராயப்பா, திம்மராஜ், மாணவரணி ஜெகதீஷ், கெலமங்கலம்  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தேவராஜ், வெங்கடேஷ், மஞ்சு, தர்ரெட்டி,  நாராயணசாமி, வண்ணப்பா மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Dhar ,Dhali ,
× RELATED கர்நாடகாவில் 16 இடங்களில் ஐடி ரெய்டு